ஜப்பானின் புதிய இராணுவமயமாக்க செயல்களுக்கு கடும் எதிர்ப்பு
ஜப்பான் அரசு, பாதுகாப்பு உபகரணங்களின் பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் வழிக்காட்டலை ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திருத்தியுள்ளது. இதனால் பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். முந்தைய கொள்கைகளின்படி போர் அல்லாத 5 வகை பயன்பாட்டு நோக்கங்கள் கொண்ட ஆயுதங்களை ஜப்பான் ஏற்றுமதி செய்யலாம். ஆனால், தற்போது இந்த கட்டுப்பாடு அகற்றப்பட்டுள்ளது. இது, போருக்கு பிறகு ஜப்பானின் பிரத்யேக தற்காப்பு என்ற கோட்பாட்டை மீறியுள்ளது.
22-Apr-2026